'இந்தியன் 2' படத்திற்காக தற்காப்புக்கலை பயிற்சியில் காஜல் அகர்வால்: வைரல் வீடியோ

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்தவகையில் களரிப்பட்டு பயிற்சி எடுத்து வரும் காஜல் அகர்வால் இந்த கலை குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுகூறியிருப்பதாவது:

களரிப்பட்டு என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும். இது 'போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. இந்த கலையில் இருந்து தான் ஷாலின், குங் ஃபூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது. இந்த களரி பொதுவாக கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான நடைமுறையாகும்.

3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசிரியருக்கு நன்றி. அவர் என்னை பொறுமையாக வழி நடத்தியதற்கும், இந்த கலையை சிறப்பாக கற்று கொடுத்ததற்கும் நன்றி’ என பகிர்ந்துள்ளார்.

களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலையை நிஜமாகவே கற்று, ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதால் அவரது கேரக்டர் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இசைப்புயலுடன் இரண்டு தென்றல்கள்: த்ரிஷா பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம்.

'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் குஷி!

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளிவந்துள்ள

தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன்: ரூ.25 கோடி பரிசு பெற்றவர் மனவருத்தம்!

ரூபாய் 25 கோடி பம்பர் லாட்டரி குலுக்கலில் பரிசு வென்ற ஆட்டோ டிரைவர் தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனவருத்தத்துடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரே நாளில் 'வாரிசு' , 'துணிவு' ரிலீஸ்: பிரபல நடிகரின் டுவிட்டால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு'  மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ஒரேநாளில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 'கேஜிஎஃப் 2' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்'  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் .