close
Choose your channels

இந்த ஆண்டு 10, அடுத்த ஆண்டு 21: காஜல் அகர்வாலின் இலக்கு

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது 'பாரீஸ் பாரீஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. மேலும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திலும் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டார். நேற்றைய மாரத்தான் போட்டியில் அவர் 10 கிமீ தூரத்தை 70 நிமிடங்களில் கடந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். குறைந்த அளவே பயிற்சி எடுத்தும் கடந்த ஆண்டை விட தான் 8 நிமிடங்கள் குறைவாக இந்த தூரத்தை கடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு 21 கிமீ தூரம் வரை செல்ல முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பலர் தனக்கு இன்ஸ்பிரஷனாக இருந்ததாகவும், அவர்கள் ஒலிம்பிக்கிலும் சென்று சாதனை செய்ய நாம் வாழ்த்துவோம் என்றும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment