close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கிடையாதா? அவரது காட்சிகள் என்ன ஆச்சு?

Sunday, June 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் உட்பட இந்த படத்தில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் வருகை தந்திருந்தார்கள் என்பதும் அதில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை காஜல் அகர்வால் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விழாவில் ஷங்கர் பேசிய போது ’காஜல் அகர்வால் ’இந்தியன் 2’ படத்தில் இல்லை என்றும் அவரது காட்சிகள் ’இந்தியன் 3’ படத்தில் தான் வருகிறது என்றும் கூறியது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும்’ இந்தியன் 3’ திரைப்படத்தில் கமல்ஹாசன் இளவயது கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அவருடைய கேரக்டர் டீஏஜிங் டெக்னாலஜி மூலம் இளமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த கேரக்டருக்கு தான் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது,

’இந்தியன் 3’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் காஜல் அகர்வால் காட்சிகள் அந்த திரைப்படத்தில் தான் உள்ளது என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் இன்னும் ஒரு வருடம் அவரை திரையில் பார்க்க காத்திருப்போம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காஜல் அகர்வால் காட்சிகள் இல்லையென்றாலும் ‘இந்தியன் 2’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.