காஜல் அகர்வால் திருமண அறிவிப்பு: மும்பை தொழிலதிபரை மணக்கின்றார்!

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் தனது திருமணம் நடைபெற இருப்பதாகவும், தொழிலதிபர் கெளதம் என்பவருடன் தனக்கு நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், கோவிட் காரணமாக இந்த திருமணம் எளிய முறையில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் தனக்கு இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். காஜல் அகர்வாலின் இந்த தகவல் தற்போது பரபரப்பை அடைந்துள்ளது.