close
Choose your channels

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜெயம் ரவியின் வெற்றிப்படம்

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கோமாளி’ இந்த படத்திற்கு பின்னர் பல திரைப்படங்கள் வெளிவந்தபோதிலும் நான்காவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது கோமாளி’. இந்த படம் ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னணி தெலுங்கு நட்சத்திரம் ஒருவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் காஜல் அகர்வால் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் அவர் ‘கோமாளி’ தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

‘கோமாளி’ ரிலீஸ் ஆன அதே தினத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு திரைப்படமான Ranarangam என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு சிறிய வேடம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.