close
Choose your channels

'இந்தியன் 2' படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் காஜல் அகர்வால்: வைரல் வீடியோ

Wednesday, September 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகை காஜல் அகர்வால் ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

குதிரை மீது ஏறி சவாரி செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள காஜல் அகர்வால் இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கூறியிருப்பதாவது: குழந்தை பிறந்த பின்பு உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடல் எடையை கொண்டு வருவது என்பது ஒரு சவாலான காரியம். நீண்ட நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறைவது ஒரு பெரிய காரியமாக உள்ளது.

குழந்தை பிறந்த பிறகு பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவது கடினமாக உள்ளது. குறிப்பாக தற்காப்புக்கலை பயிற்சியின் போது தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்து இருந்தார்.

மேலும் பெண்கள் தங்கள் உடலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டுமென்றும் நமது உடல்கள் மாறலாம் அல்லது மாறாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆர்வம் மாறக்கூடாது என்றும் அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’இந்தியன் 2’ படத்திற்காக தயாராகி வருவதாகவும் புதுப்புது திறன்களை இந்த படத்திற்காகத்தான் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காஜல்அகர்வாலுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment