close
Choose your channels

ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான்கான் படத்தில் இணைந்த 'துப்பாக்கி' நாயகி.. குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, September 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகும் ’சிக்கந்தர்’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் கூட மும்பையில் தாராவி போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் சமீபகாலமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

’சிக்கந்தர்’ திரைப்படத்தில் இணையும் இன்னொரு நாயகி காஜல் அகர்வால் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தளபதி விஜய்யின் ’துப்பாக்கி’ திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் காக; அகர்வால் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அஜித், விஜய், உட்பட பல பிரபல நடிகர்களுடனும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போது சல்மான் கான் படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment