மோடி பதவியேற்பு விழாவுக்கு அஜித்-விஜய் பட நாயகிக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமர் மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித், விஜய், சூர்யா உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழை காஜல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த அழைப்பு தனக்கு தாமதமாக கிடைத்ததால் உரிய நேரத்தில் டெல்லி செல்ல முடியாத நிலைக்கு வருந்துவதாக காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தனக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி அவர்களுக்கு மிகவும் நன்றி என்றும், மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.