காஜல் அகர்வாலுக்கு கிடைத்த இரட்டை சந்தோஷம்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், ஜெயம் ரவியுடன் நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி காஜல் அகர்வால் நடித்த இன்னொரு திரைப்படமான 'ரனரங்கம்' என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சர்வானந்த், காஜல் அகர்வால், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுதீர்வர்மா என்பவர் இயக்கியுள்ளார். இதுவொரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பதால் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் தான் நடித்த இரண்டு படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷமாக இருப்பதாக காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகவுள்ளது. மேலும் அவர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.