நீங்கள் மிகவும் அற்புதமான தந்தை: கணவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய காஜல் அகர்வால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் ஒரு அற்புதமான தந்தையாக மாறப் போகிறீர்கள் என தனது கணவருக்கு நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .
பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பதும் தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது கணவருக்கு நன்றி கூறி நீண்ட பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் விரும்பக்கூடிய சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பாவாக நீங்கள் இருப்பதற்கு மிகவும் நன்றி. தன்னலமற்றவராக இருக்கும் நீங்கள் நான் ஒவ்வொரு முறையும் காலை எழுந்திருக்கும் போதும், இரவு தூங்கும் போதும் என்னுடன் இருந்து என்னை கவனித்துக் கொள்வதற்கு நன்றி! எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக டாக்டருக்கு தகவல் அனுப்பி அவருடைய அறிவுரையை கேட்டு என்னை நன்றாக வைத்துக் கொள்கிறீர்கள். அவ்வப்போது என்னை அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். எப்போதும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள்.
என்னை நேசிப்பதன் மூலம் நம்முடைய அன்பான குழந்தையையும் நீங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் ஒரு மிகச்சிறந்த தந்தையாக இருப்பீர்கள் என்பதையும் நான் அறிகிறேன். கடந்த எட்டு மாதங்களில் நீங்கள் மிகவும் அன்பான அப்பாவாக மாறி வருவதை நான் பார்த்து வருகிறேன். நம் குழந்தையின் மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். நம் குழந்தைக்கு நேசிக்கும் நல்ல அப்பா கிடைத்தது அதிர்ஷ்டம் தான். நீங்கள் ஒரு முன்மாதிரி அப்பாவாக இருக்க போகிறீர்கள்.
நமது வாழ்க்கை இனிமேல் சற்று சவாலாக மாறப்போகிறது. நமக்கு இனிமேல் தனியாக நேரம் கிடைக்காது, ஒவ்வொரு வார இறுதியிலும் திரைப்படங்களுக்கு செல்லவோ அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் முடியாது. நமக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கும். தூக்கமில்லாத இரவுகள் இருந்தாலும், நமது உடல்நிலை சரியில்லாமல் போனாலும் நம் வாழ்வின் சிறந்த நேரமாக இருக்கும்.
ஆனால் ஒன்று மட்டும் எப்போதுமே மாறவே மாறாது. அதுதான் நான் உங்களை நேசிப்பது. நீங்கள் என் பக்கத்தில் இருப்பது நான் மிகப் பெரிய பாக்கியசாலியாக உணர்கிறேன். நீங்கள் மிகவும் ஒரு அற்புதமான தந்தையாக இருக்க போகிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com