இதுதான் நாங்கள்: காஜல் அகர்வால் வெளியிட்ட க்யூட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இதுதான் நாங்கள்’ என கேப்ஷனாக பதிவு செய்த கியூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார் என்பதும் தெரிந்ததே.

முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் வளைகாப்பு வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ’இதுதான் நாங்கள்’ என்ற கேப்ஷனுடன் கருப்பு வெள்ளையில் அழகிய க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் காஜல் அகர்வால் அவரது கணவர் மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி உள்ளது. இந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் அழகான சிரிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் நடிகை தமன்னா உள்பட பல பிரபலங்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.