தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனைக்கு காஜல் அகர்வால் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
பின்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகள போட்டிகளில் இன்று 400 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.
உலக ஜூனியர் தடகள போட்டிகளில் முதல்முறையாக தங்கம் பதக்கம் வென்ற ஹிமா தாஸுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஏராளமான பிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஹிமாதாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு அற்புதமான வெற்றி இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்த ஹிமாவுக்கு வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
What an incredible feat!
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) July 13, 2018
Congratulating #HimaDas on winning India's first-ever track gold at the IAAF World U-20 Athletics Championships. #GirlPower #IAAFWorldU20 pic.twitter.com/V9lzvxo7Fn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments