இதை கண்டுபிடித்துவிட்டால் கருப்பு உடையை அணிய மாட்டேன்: காஜல் அகர்வால்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பிறகு மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய அவர் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ உள்பட 5 திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காஜல் அகர்வால் தனக்கு மிகவும் பிடித்த உடை கருப்பு நிற உடை என்று பல பேட்டிகளில் கூறி உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உள்ள புகைப்படங்களில் பெரும்பாலும் அவர் கருப்பு உடை அணிந்ததாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் அவர் கருப்பு உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’இனிமேல் நான் கருப்பு உடை அணிவது நிறுத்திக்கொள்வேன், ஆனால் அதைவிட டார்க் நிறத்தை யாராவது கண்டுபிடித்தால்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். காஜல் அகர்வால் இந்த புகைப்படத்தை பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் சுமார் 2 லட்சம் பேர் இதனை லைக் செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com