பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அஜித்-விஜய் நாயகி

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச்செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்தியாவில் உள்ள முக்கிய திரை நட்சத்திரங்களும் பிரதமருக்கு தொலைபேசி வாயிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் விஜய், அஜித் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையான காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்' என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

More News

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளிவரும் என்ற வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜூ காலமானார்.

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 68. சிவாஜிகணேசன், சத்யராஜ் நடித்த 'ஜல்லிக்கட்டு',

'மூன்றாவது கண்' என்பது காலத்தின் கட்டாயம்: விக்ரம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இரவில் மட்டுமின்றி பகலிலும் தற்போது கொலை, கொள்ளை,

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-விக்ரம் நாயகி

நடிகர் சிம்பு தற்போது ஒரே நேரத்தில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' மற்றும் சுந்தர் சியின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.