அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? காஜல் அகர்வால் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு ஒரு வயது பூர்த்தியானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும் இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை காஜல் அகர்வால் அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றுடன் காஜல் அகர்வாலின் மகனுக்கு ஒரு வயது பூர்த்தியானதை அடுத்து கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு சுமார் 7 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின்னரும் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments