விக்கி-நயனின் இரட்டை குழந்தைகள்: காஜல் அகர்வால், கஸ்தூரி என்ன சொன்னாங்க தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் திருமணமான 4 மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது
விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும், இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெற்றோர் கிளப்பிற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வரவேற்பதாகவும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகிய இருவருக்கும் தனது ஆசீர்வாதங்கள் என்றும் தெரிவித்துள்ளார்
காஜல் அகர்வாலை தொடர்ந்து கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என்று கூறியுள்ளார்.
To all those telling me to mind my business,as someone who qualified to be a lawyer, I am certain legal analysis counts . And unlike the issue being discussed, my views are given completely altruistically , non commercially and after more than five years of being eligible.
— Kasturi Shankar (@KasthuriShankar) October 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments