close
Choose your channels

குழந்தையின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்த காஜல் அகர்வால்: குவியும் வாழ்த்துக்கள்!

Wednesday, April 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் பெயர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கௌதம் கிட்சலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் ஆனார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நேற்று காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும் தாயும் சேயும் நலம் என்றும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சக நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

இந்த நிலையில் சற்று முன் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு தனது சமூக வலைத்தளத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். தங்கள் குழந்தைக்கு நீல் கிட்சலு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் உங்கள் அனைவரின் ஆசியும் அந்த குழந்தைக்கு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

இதனை அடுத்து ரசிகர்கள் காஜல் அகர்வாலின் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment