'பேட்மேன்' சவாலை ஏற்றுக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

அக்சயகுமார் நடிப்பில் உருவான நாப்கின் குறித்த விழிப்புணர்வு திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பெண்கள் டாய்லட்டில் இலவச நாப்கின்கள் வைக்கும் அளவுக்கு இந்த படம் பெரும் பாதிப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக #PadmanChallenge என்ற ஹேஷ்டெக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் நடிகைகள் உள்பட பிரபலமான பெண்கள் பலர் தங்கள் கையில் நாப்கின்களை வைத்து போஸ் கொடுத்து வருகின்றனர். மேலும் நாப்கின்களை கையில் வைத்து போஸ் கொடுப்பதில் தங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை என்றும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பேட்மேன் சவாலில் தற்போது தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாப்கினை கையில் வைத்தபடி போஸ் கொடுத்து தானும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். ஒரே ஒரு திரைப்படம் பெண்கள் மத்தியில் இந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

More News

2.0வை முந்தியதா காலா: ரிலீஸ் தேதி இதோ:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில்

சன்னி லியோன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

சன்னிலியோன் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் நடித்து வரும் 'வீரமாதேவி' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்

கமல் டைட்டில், மூன்று ஹீரோயின்கள்: ஜெய் காட்டில் மழை

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் மற்றும் கலகலப்பு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது 'நீயா 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியின் 'காலா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டர்: தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' மற்றும் 'காலா; ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவ்வருடம் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும்

இரண்டாவது படத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தனுஷ்

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார்