கைதி படத்தின் ரன்னிங் டைம் மற்றும் முக்கிய தகவல்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை தீபாவளி விருந்தாக விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியாகும் ஒரே படம் கார்த்தி நடித்த கைதி. கைதி திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல்களை இந்த படத்தின் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கார்த்திக் இந்த படத்தில் டில்லி என்ற கேரக்டரில் நடித்து இருக்கின்றார். பத்து வருடங்கள் ஜெயிலில் இருக்கும் கார்த்தி அதற்கு முன்னர் என்னவாக இருந்தார் என்பதே இந்த படத்தில் உள்ள ஒரு சஸ்பென்சாக கருதப்படுகிறது,. மேலும் தனது மகளின் முகத்தை பிறந்தது முதல் பார்க்காத கார்த்திக் மகளை பார்க்க எடுக்கும் முயற்சி தான் இந்த படத்தின் கதை. இதனால் தந்தை மகள் பாசக்காட்சிகள் இந்த படத்தில் முக்கியத்துவம் பெறும்.
மேலும் இந்த படத்தில் ஒரு காயமடைந்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் நரேன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் படம் முழுவதும் கார்த்தியுடன் பயணம் செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் இரண்டு மணி நேரம் ஆகும். மொத்தமுள்ள இரண்டரை மணி நேர படத்தில் அரை மணி நேரம் படம் முடிந்த உடனே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிடும் என்றும் அதன்பின்னர் வரும் இரண்டு மணி நேரமும் கிளைமாக்ஸ் தான் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகும். அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்களும், இரண்டாம் பாதி ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் டூப் இன்றி படமாக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் 62 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நடந்து உள்ளது என்பதும், முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This is what Kaithi is all about.
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 24, 2019
You surely do not want to miss this in theaters. Enjoy your weekend watching #Kaithi. #KaithiFromTomorrow #KaithiDiwali pic.twitter.com/SrbgQiebpf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments