'கைதி' 'மாஸ்டர்' பிரபலத்திற்கு திருமணம்; லோகேஷ் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 3 திரைப்படங்கள் உள்பட ஒருசில திரைப்படங்களில் எடிட்டராக பணிசெய்த ஃபிலோமின்ராஜ் என்பவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ ’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன் உள்பட பல படங்களுக்கு எடிட்டராக பணி செய்த ஃபிலோமின்ராஜ் இன்று தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இன்று முதல் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிலோமின்ராஜ் - திவ்யா பிரதீபா ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களுடைய புதிய பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மூன்று படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்த ஃபிலோமின்ராஜ் அடுத்து இயக்கவிருக்கும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்திற்கும் பணிபுரியவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது