'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் ’கைதி’. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் லாபத்தை கொடுத்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’கைதி’ படத்தை ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் மூவீஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ’கைதி’ இந்தி ரீமேக் படத்தில் கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்கவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகியவை தங்களது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளன. தமிழ் போலவே இந்தியிலும் ’கைதி’ சூப்பர்ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
We are thrilled to announce that @ajaydevgn will be playing the lead in @RelianceEnt @DreamWarriorPic and @ADFFilms Hindi remake of #Kaithi. The film will release on February 12, 2021.@Shibasishsarkar #SRPrakashbabu @Meena_Iyer
— S.R.Prabhu (@prabhu_sr) February 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments