வசூல் மழையில் கைதி: விநியோகிஸ்தர்களுக்கு ஜாக்பாட்

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

கடந்த தீபாவளி விருந்தாக தளபதி விஜய்யின் பிகில் படம் வெளியான நிலையில் அந்த படத்துடன் வெளியான ஒரே தமிழ்படம் கார்த்தி நடித்த கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் வசூல் அபாரமாக இருந்து வருகிறது. இந்தப் படம் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூபாய் 73 கோடி வசூல் செய்துள்ள நிலையில் விரைவில் ரூபாய் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 34.2 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னையின் வசூல் மட்டும் ரூபாய் 1.75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் கேரளாவில் 6.1 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 6.5 கோடி ரூபாயும், ஆந்திராவில் 11 கோடி ரூபாயும், மற்றும் வட இந்தியாவில் 1.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ள இந்த படம் வெளிநாடுகளில் மட்டும் 13 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படும் இந்தப் படம் தற்போது இரு மடங்குக்கும் அதிகமான லாபத்தை கொடுத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது