ஒரே வாரத்தில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கொடுத்த 'கைதி'

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் என்ற பிரம்மாண்டமான படத்துடன் தைரியமாக வெளிவந்த ஒரே படம் கார்த்தியின் கைதி மட்டுமே. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளே கிடைத்த போதிலும் இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் ரிசல்ட் காரணமாக அடுத்தடுத்து திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் ரூபாய் 48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 22.43 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் ரூ 1.75 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கைதி திரைப்படம் கேரளாவில் 4.2 கோடியும் கர்நாடகாவில் 4.7 கோடியும் ஆந்திராவில் 9.1 கோடியும் வட இந்தியாவில் 1.5 கோடியும் வசூல் செய்துள்ள இந்த படம் வெளிநாடுகளில் 6 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஒரே வாரத்தில் 48 கோடி வசூல் செய்துள்ளது தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.