'இந்தியன் 2' படத்தில் இணையும் 'கைதி' பட நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலம் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து வருவதை பார்த்து வந்தோம். ஏற்கனவே கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத்திசிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், விவேக், கிஷோர் ,வித்யுத் ஜம்வால், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் புதியதாக ஜார்ஜ் மரியான் என்பவர் இணைந்துள்ளார். இவர் கடந்த தீபாவளி அன்று வெளியான ’கைதி’ படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியன் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அனிருத் இசையமைப்பில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் ’இந்தியன் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கனமழை எதிரொலி: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும்

நீட், பேனர் மற்றும் ஆழ்துளையால் பலியான உயிர்கள்!

தமிழகத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு பிரச்சனை குறித்து அதிகமாக பேசும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது 

கார் விபத்தில் தமிழ்ப்பட ஹீரோ பரிதாப பலி

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த புழல்' என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்த மனோ என்ற நடிகர் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு வயது 37

32 ஆண்டுகளாக ஒரு ஆழ்துளை கிணறு மரணம் இல்லை: அமெரிக்காவில் இருந்து பாடம் கற்குமா இந்தியா?

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து சுஜித் என்ற 2 வயது சிறுவன் மரணம் என்பது தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் மரணமல்ல. இதற்கு முன்னர் பல குழந்தைகள்

நிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்

பீகார் மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.