காதலும் கடந்து போகும். திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' உள்பட ஒருசில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த விஜய்சேதுபதியை இயக்குனர் சீனுராமசாமி தனது 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் நாயகனாக்கினார். அந்த படம் நல்ல வெற்றி பெற்றதுடன் தேசிய விருதும் பெற்றதால் விஜய்சேதுபதி கவனிக்கப்படும் ஹீரோக்களின் வரிசையில் இணைந்தார்.
அதன் பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும் என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த விஜய்சேதுபதி இடையில் சில படங்களில் சறுக்கினாலும் தற்போது 'நானும் ரெளடிதான்', சேதுபதி ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் நிமிர்ந்து நிற்கின்றார். இந்நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது.
ஏற்கனவே நலன் குமாரசாமியுடன் இணைந்து சூதுகவ்வும்' என்ற வெற்றியை கொடுத்துள்ளதால் மீண்டும் இருவருடைய கெமிஸ்ட்ரியில் வரவிருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நானும் ரெளடிதான்' பட பாணியில் காமெடி மற்றும் காதல் கதையுடன் மீண்டும் விஜய்சேதுபதி களமிறங்கியுள்ளார்.
மலையாள ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் தனது முதல் படமான 'பிரேமம்' படத்தின் மூலம் கவரப்பட்ட நாயகி மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இரண்டாவது படம் என்பதும் எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் சமீபத்தில் வெளிவந்த டிரைலரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய 'காகாகா போ' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதும் இந்த படத்திற்கு கிடைத்த ப்ளஸ்.
தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களில் நடித்த விஜய்சேதுபதிக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையுமா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யுமா? என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout