ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பொண்ணோட அவன் இருக்க மாட்டான்: மகத் நடித்த 'காதலே காதலே' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

பிக் பாஸ் மகத் நடித்த காதலே காதலே என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இந்த படத்தில், மகத் ஒரு பிளேபாய் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிப்பதும், அடிக்கடி பெண் நண்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பதும் டீசரில் உள்ளது.

ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பொண்ணோட அவன் இருக்க மாட்டான் எனக் கூறப்படும் கேரக்டரில் மகத் நடித்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் பல பெண்கள் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனைகளும், அதற்காக விடிவி கணேஷ் கூறும் அறிவுரைகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் இந்த படத்தின் கதை என டீசரில் வெளிப்படுகிறது.

மகத், மீனாட்சி கோவிந்தராஜன், பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா, ஸ்ரீஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்நாத் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுதர்சன் கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியாகு படத்தொகுப்பில் உருவான இந்த படம் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையிலான ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகை பார்வதி நாயர், 'அயலான்' தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன நடந்தது?

பிரபல நடிகை பார்வதி நாயர் மற்றும் "அயலான்" படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் உள்ளன.

முன்னாள் பிரதமருடன் படித்தவர் அமிதாப்பச்சன்: ரஜினிகாந்த் சொன்ன தகவல்..!

"வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டின் போது, நடிகர் அமிதாப் பச்சன் முன்னாள் பிரதமருடன் படித்தவர் என்ற ரஜினிகாந்த் கூறிய தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் மேலும்

'காக்கா' கதையை அடுத்து 'கழுதை' கதை சொன்ன ரஜினிகாந்த்: வேட்டையன் விழாவில் சுவாரஸ்யம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ரஜினிகாந்த் சொன்ன கழுதை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

என்கவுண்டர்ங்கிற பேருல கொலை பண்றதுதான் ஹீரோயிஸம்? 'வேட்டையன்' டீசர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

'வேட்டையன்' அமிதாப்புக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் பின்னணி குரலா? யார் பேசியது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது