கோவிலில் பிச்சையெடுத்த 'காதல்' பாபுவுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த விருச்சிககாந்த் என்ற பாபு, வறுமையின் பிடியில் சிக்கி கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனடியாக நடிகர்கள் மோகன் மற்றும் தீனா ஆகியோர் பாபுவை மீட்டுள்ளனர். தற்போது பாபு, தீனா வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் வீடியோ ஒன்றில் மோகன் மற்றும் தீனா குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பாபுவுக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்பட்டது தவறு என்றும், அவருக்கு மன அழுத்தம் அதான் உள்ளதாகவும், அதை விரைவில் சரிப்படுத்திவிட முடியும் என்றும் மேலும் இந்த வீடியோவை பார்க்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் பாபுவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் மோகன் மற்றும் தீனா அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று பாபு பேசிய காமெடி வசனம் பல வருடங்களுக்கு பிரபலமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது நிலைமை படுமோசமாக உள்ளது. இருப்பினும் தற்போது அவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றார். திரையுலகில் உள்ள நல்ல உள்ளங்கள் அவருக்கு மீண்டும் படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை கொடுத்து அவருக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

ஜிஎஸ்டி வரி எதிரொலி: தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி முடிவு

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பெரும்பாலான வணிகங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரைத்துறையினர்களுக்கு கடும் பாதிப்பு இருப்பதால் திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள் இந்த புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

ஜிஎஸ்டி: சென்னையில் ஆன்லைன் புக்கிங் திடீர் நிறுத்தம்

இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது. எனவே நாளை முதல் பல்வேறு பொருட்களின் விலை மற்றும் கட்டணங்களில் பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

'விக்ரம் வேதா' படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் அதிகாரிகள்

முதன்முதலாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது...

தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது...

தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.