'காதல்' பட கரட்டாண்டிக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பரத், சந்தியா நடிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ’காதல்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும் உருக்கும் வகையில் இருந்ததே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’காதல்’ திரைப்படத்தில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் பரத்துக்கு உதவியாளராக கரட்டாண்டி என்ற சிறுவன் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் இந்த படத்தை அடுத்து விஜய்யின் ‘சிவகாசி’ உள்பட மேலும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பதும் இவரது இயற்பெயர் அருண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’காதல்’ திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இளைஞர் ஆகியுள்ள அருணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அருண் திருமணத்தில் ’காதல்’ படத்தில் நடித்த சுகுமார் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com