close
Choose your channels

மொட்டைத் தலையுடன் காட்சி அளிக்கும் 'காதல்' பட நடிகை.. என்ன ஆச்சு? வைரல் வீடியோ..!

Sunday, June 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பரத், சந்தியா நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ‘காதல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென மொட்டை தலையுடன் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'காதல் கவிதை’ ’நீ வருவாய் என’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சரண்யா. அதன் பின்னர் இவர் ’எனக்கு 20 உனக்கு 18’ போன்ற படங்களில் நடித்த நிலையில் ‘காதல்’ திரைப்படத்தில் நாயகி சந்தியாவுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பிறகு ’சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ ’பேராண்மை’ ’மழை காலம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த பின்னர் திருமணத்திற்கு பின்னர் அவர் திரையுலகில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் நடிகை சரண்யா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் என்னையே தந்து விட்டேன் கந்தனிடமே, அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் அவர் நாக்கில் அலகு குத்தி பால்குடம் எடுத்துச் செல்லும் காட்சியும் இருப்பதை எடுத்து அவருடைய வேண்டுதலுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து திருத்தணி கோயிலுக்கு வந்து மொட்டை அடித்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ‘காதல்’ திரைப்படத்தில் சிறு பெண்ணாக பார்த்த சந்தியாவா இவர்? என்று பலர் ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment