கடாரம் கொண்டான் படத்தின் கரெக்டான ரன்னிங் டைம்!

  • IndiaGlitz, [Sunday,July 14 2019]

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் ரன்னிங் டைம் 121 நிமிடங்கள் அதாவது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஆக்சன் படமான இந்த படத்தின் ரன்னிங் டைம் கரெக்டாக அமைந்திருப்பதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். தூங்காவனம் மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய இரண்டு படங்களும் பிரெஞ்ச் படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே

வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா,

அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே