மெரினா என்றால் 'ஜல்லிக்கட்டு', கடைக்குட்டி சிங்கம் என்றால் 'ரேக்ளா;
- IndiaGlitz, [Tuesday,July 10 2018]
மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடைபெறும் முன்னர் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை பலர் கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வீர விளையாட்டு குறித்து பலர் விரிவாக அறிந்திருக்கவில்லை. குறிப்பாக 'வாடி வாசல் ' என்ற வார்த்தையே ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின்னர்தான் நகரங்களில் இருக்கும் பலருக்கு தெரியவந்தது. அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு நிகரான ஒரு விளையாட்டு 'ரேக்ளா ரேஸ்
இந்த ரேக்ளா ரேஸ் சினிமாவில் பெரிதாக சொல்லப்படவில்லை. ஆபாவாணன் இயக்கிய 'உழவன் மகன்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ரேக்ளா ரேஸ் பார்வையாளர்களை புல்லரிக்க வைக்கும். ஆனால் இந்த படம் வெளிவந்து சுமார் முப்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் இன்றைய இளையதலைமுறையினர் 'ரேக்ளா ரேஸ்' குறித்து அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான்
இந்த நிலையில் வரும் வெள்ளியன்று வெளிவரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு பின்னர் இன்றைய இளையதலைமுறையினர் முதல் அனைவரும் 'ரேக்ளா ரேஸ் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என்றும், மெரினா என்றாலே உடனே ஜல்லிக்கட்டு ஞாபகம் வருவதை போல் இனிமேல் ரேக்ளா ரேஸ் வீர விளையாடும் தமிழர்கள் மனதில் நிற்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.