சுவர் ஏறி குதித்து வந்து என்னை மிரட்டுகிறார்.. தந்தை குறித்து பகீர் புகார் அளித்த 'கடைக்குட்டி சிங்கம்' நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தனது தந்தை சுவரில் குறித்து தன்னையும் தனது குடும்பத்தையும் மிரட்டுவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’தொண்டன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’செம்ம’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’வெண்ணிலா கபடி குழு 2’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அர்த்தனா பினு. தனது தாயார் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு அவரது தந்தை வந்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

நான் என் அம்மா தங்கை, ஆகியோர் என்னுடைய அம்மாவின் அம்மா பாட்டி வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். என் அம்மாவும் அப்பாவும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று விட்டனர்.

இந்த நிலையில் என் தந்தை அத்துமீறி எங்கள் வீட்டில் நுழைந்து எங்களை மிரட்டி வருகிறார். கதவு பூட்டப்பட்டு இருந்தாலும் அவர் கதவை திறக்கச் சொல்லி ஜன்னல் வழியாக மிரட்டுகிறார். என் தங்கையையும் பாட்டியையும் கொன்று விடுவதாக அவர் கூறுகிறார்.

மேலும் நான் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டுகிறார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு வந்து படக்குழுவினர்களையே மோசமாக பேசுகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது தந்தை வீட்டின் சுவர் ஏறி குதித்து வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

மனைவி ஆபாச நடிகை மாதிரியே நடந்துகணும்? வற்புறுத்திய கணவனுக்கு நடந்த சோகம்!

டெல்லியில் ஆபாச பட நடிகை மாதிரியே தன்னை உடை உடுத்தச் சொல்கிறார் மேலும் ஆபாச படங்களை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் என்று தனது கணவன் மீது

தமிழ், தெலுங்கை அடுத்து பிரபல மலையாள நடிகர் படத்தில் த்ரிஷா ..!

 தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் என்பதை பார்த்து

புஷ்பா புருஷன் நடிகையின் திருமண போட்டோஷூட்.. நெட்டிசன்களின் ஏடாகூடா கமெண்ட்ஸ்..!

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நடிகை ரேஷ்மா. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது க

கேஜிஎப்' படத்தின் மூன்றாம் பாகமா பிரபாஸின் 'சலார்'? வைரலாகும் டீசர் வீடியோ..!

'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' படத்தை இயக்கி உலக அளவில் புகழ்பெற்ற பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சலார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்

இதை முதலில் செய்வாரா விஜய்? பிரபல இயக்குனர் கேள்வி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.