close
Choose your channels

இரண்டாவது வாரத்திலும் வசூலில் சிங்கமாக இருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்

Monday, July 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்ட்ராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளன. அதேபோல் துணை ஜனாதிபதி முதல் பல விஐபிக்கள் இந்த படத்தை பாராட்டினர்.

இந்த நிலையில் முதல்வாரமே நல்ல வசூலை பெற்ற இந்த படம், இரண்டாவது வாரத்திலும் வசூலில் சிங்கமாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 21 திரையரங்குகளில் 263 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,19,26,646 வசூலில் செய்துள்ளது. மேலும் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் கடந்த 13ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ.3,53,87,388 வசூல் செய்து சாதனை புரிந்து ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment