ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குறது கத்தியால மட்டுமல்ல, பலமான கைகளாலும் தான்.. 'கப்ஜா' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘கப்ஜா’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
1945 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய கதையம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகளாக உள்ளது என்பதும் டிரைலரில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசையமைப்பில் தீபு எஸ் குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது
இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’ என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments