தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே. தமிழில் ஏற்கனவே ‘அபியும் நானும்’ என்ற படத்தில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் பிரபல ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டொவினா தாமஸ் நடிக்க இருக்கும் ஐந்து மொழி திரைப்படம் ஒன்றின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ’மின்னல் முரளி’ என்று வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலை நடிகர் கபிர் சிங் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் அஜித் நடித்த ’வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் திரைபடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் பசில் ஜோசப் என்பவர் இயக்கவுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை சோபியா பால் என்பவர் தயாரிக்க உள்ளார்.
It’s an honour to present the first look poster of multilingual superhero movie - MINNAL MURALI.
— Kabir Duhan Singh (@Kabirduhansingh) August 25, 2020
⚡ Malayalam & Tamil: Minnal Murali
⚡Hindi: MISTER MURALI
⚡Telugu: MERUPU MURALI
⚡Kannada: MINCHU MURALI
Congratulations to the entire team of #MinnalMurali
#Gratitude ?? pic.twitter.com/2s8KCBDu0W
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments