விக்ரமின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வேதாளம்' படத்தின் வில்லன்களில் ஒருவராக கபீர்சிங் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விக்ரம் நடித்து வரும் அடுத்த படமான 'கடாரம் கொண்டான்' படத்திலும் கபீர்சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

'கடாரம் கொண்டான்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வரும் ஜனவரி 15ஆம் தேதி என்ற அறிவிப்புடன் வெளிவந்துள்ள புதிய ஸ்டில் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய கபீர் சிங், 'உங்களுடன் சில நாட்கள் இணைந்து பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது' என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற ஒரு ஆக்சன் படம் இதற்கு முன் வந்ததில்லை என்ற அளவுக்கு இந்த படம் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கபீர்சிங்கின் இந்த டுவீட்டை அடுத்து 'கடாரம் கொண்டான்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

More News

பா.ரஞ்சித் கலை நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி ஆவேச பேச்சு

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'வானம்' கலை நிகழ்ச்சி இன்று முதல் மூன்று நாட்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறுகிறது.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசன் திரைப்படம்

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

பிரமாண்ட இயக்குனரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அமெரிக்காவில் புது உற்சாகத்துடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும்,