இது ஜனநாயகம் அல்ல, போர்க்களம்: கபிலன் வைரமுத்து
- IndiaGlitz, [Saturday,September 02 2017]
ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை கல்வி. அந்த கல்வி மறுக்கப்படுவது அதுவும் ஒரு ஏழை மாணவிக்கு மறுக்கப்படுவது சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்கு சமம். தகுதி இருந்தும் விரும்பிய கல்வி கிடைக்காததால் இன்று ஒரு நல்ல மருத்துவரை நாடு இழந்துள்ளது.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து அனிதாவின் மரணத்திற்கு ஆளும் கட்சியின் ஆதரவாளர்கூட கண்டனம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 'அடிப்படை உரிமைகளைக் கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழலுக்கு பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்' என்று கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்களம் அமைக்கும் முன்னர் மத்திய, மாநில அரசுகள், நீட் குறித்து மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.