திரையில் விழும் அரசியல் வெளிச்சம் தரையிலும் விழட்டும்: கபிலன் வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கபிலன் வைரமுத்துவின் 'இளைஞர்கள் என்னும் நாம்' என்னும் ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வரும் 25ஆம் தேதி வெளியிடுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்ச்சமுகம் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் அடியெடுத்து வைப்பதை அனைவருமே உணர்கிறோம். கருத்துக்களோடு நில்லாமல் களத்தில் இறங்கி செயல்படும் இயக்கங்கள் இங்கே ஏராளம். வருகிற செப்டம்பர் 25 இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் வெளியிடும் 'இளைஞர்கள் என்னும் நாம்' என்ற ஆவணப்படத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு மாணவர் இயக்கமாக கல்லூரி நாட்களில் மேற்கொண்ட சில களப்பணிகளை பதிவு செய்திருக்கிறோம். இந்த சிறு அனுபவம் எங்கள் சகோதர சகோதரிகளுக்கு பயன் தருமென நம்புகிறோம்
16 வயதில் தொடங்கிய இந்த முயற்சிகளில் சில அபத்தங்கள் இருக்கலாம், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருக்கலாம். ஆனால் சமூக மாற்றத்திற்காக நிகழ்ந்த நேர்மையான முயற்சிகளில் இதுவும் ஒன்று. நாங்கள் இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் எங்களை விட பன்மடங்கு சிறப்பாக இயங்கிய இயங்கும் இளைஞர் இயக்கங்கள் அவர்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முன்வருவர். இது ஆரோக்கியமான செயல்களுக்கு வழிவகுக்கும் திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் மீது விழும் அரசியல் வெளிச்சம், தரையில் நிற்கும் இளைஞர்களின் மீதும் விழட்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments