எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற இருப்பதாகவும் அதற்காக வரும் செப்டம்பர் 18ஆம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தங்களுடைய கருத்தை பலர் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் இது குறித்து கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’2030களில் இருந்து கால ரயிலில் ஏறி பின்னோக்கிச் செல்லும் இந்தியன் 1920 களின் சிறுவனிடம் பேசும்போது இந்தியாவின் பெயர் இப்படி மாறி இருக்கலாம் என்று நினைத்து எழுதினேன். அந்த எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.
கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற புத்தகத்தில் வரும் உரையாடலில் நீங்கள் எந்த ஊரு என்று ஒருவர் கேட்கும் போது ’பாரத்’ என்று இன்னொருவர் பதில் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments