தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரை: தூரிகையின் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை நேற்று இரவு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் அவர் தற்கொலை குறித்த விழிப்புணர்வு பதிவை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவரை திருமணம் செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தூரிகை தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை எண்ணத்திற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு கட்டுரையை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, உங்கள் தற்கொலையால் யாரும் எதையும் இழக்க மாட்டார்கள். ஆனால், நாம் நம் வாழ்க்கையை, நம் சிரிப்பை, இன்பத்தை, நம் அனுபவங்கள், நம் சிறு சிறு சந்தோசங்களையும் இழக்கிறோம், நம் வாழ்க்கையை முழுவதுமாக இழக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இறந்த பின்பு சமூக ஊடகங்களில் ஒரு கதையை வெளியிடுவார்கள், ஓரிரு நாட்கள் சோகமாக இருப்பார்கள். ஆனால் பெற்றோரின் வலி மற்றும் அவர்கள் உங்கள் மீது அவர்கள் பொழிந்த அன்பு? அந்த வலி ஈடுசெய்ய முடியாதது.
உறவுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனர் என்பதைப் பொருத்து, அவர்களின் நினைக்கக்கூடிய நாட்கள் நீடிக்கும். அது ஒரு வருடம் அல்லது 5 அல்லது 10 வரை இருக்கும். பிறகு அவர்கள் தங்கள் வழக்கமான பணிக்கு திரும்பிவிடுவார்கள். தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். வாழ்க்கையில் அதன் ஓட்டத்தில் உங்களின் நினைவு சாதாரணமாக மாறிவிடும்.
இழப்பு உங்களுக்கு மட்டுமே, உங்கள் மீதமுள்ள வாழ்க்கையை நீங்கள் இழக்கிறீர்கள். உங்கள் சொந்த அழகையும் புன்னகையையும் அனுபவிக்க தவறுகிறீர்கள். உங்கள் பல வருட புன்னகையை இந்த தருணத்தில் இழக்கிறீர்கள் என்பதே தற்கொலைக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை.
அன்பான பெண்களே, ஒரு பெண்ணாக இருப்பதால், அனைத்து அசாதாரணங்கள், உங்கள் வாழ்க்கையில் அன்பு செலுத்தி வலுவாக இருக்க வேண்டும்! பெண்கள் வலுவாக இருங்கள், வலுவாக மேம்படுத்துங்கள் என தூரிகை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரையை பதிவு செய்த தூரிகையே தற்கொலை முடிவு எடுத்துள்ளது நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout