மலேசியா அருகில் உள்ள தீவில் 'கபாலி' டீம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் 'கபாலி' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியா அருகில் உள்ள அழகான தீவு ஒன்றில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் உள்ள Port Klang என்ற பகுதியின் தெற்கு பகுதியில் உள்ள Carey Island என்ற தீவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் பாம் ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்றும் மேலும் இந்த பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் இயற்கை ரசித்தவாறே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர். ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout