'கபாலி' ரூ.500 கோடி வசூல் செய்யும். கலைப்புலி எஸ்.தாணு நம்பிக்கை

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள பிரமாண்டமான திரைப்படம் 'கபாலி' வரும் 22ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. பாரீஸ் ரெக்ஸ் சினிமா முதல் உலகில் உள்ள முன்னணி திரையரங்க வளாகங்களில் வெளியாவதாலும் இந்த படத்திற்கு தமிழ் உள்பட இந்தியாவின் எந்த திரைப்படமும் போட்டிக்கு வராததாலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் இறுதிக்கட்ட வசூல் ஆகியவை பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கலைப்புலி எஸ்.தாணு, 'கபாலி' திரைப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்யும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் சுமார் 500 திரையரங்குகள் உள்பட இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் மலாய் பதிப்பு வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அந்தந்த மொழிகளில் மிக விரைவில் வெளியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 'கபாலி திரைப்படம் 'பாகுபலி' திரைப்படத்தை விட அதிக வசூல் செய்யும் என்று தான் நம்புவதாகவும் அதற்கு ஒரே காரணம் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'கபாலி' பட வழக்கு. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடும் இணையதளங்கள்...

'தல 57': அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

'ஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில்...

சென்னையில் 'கபாலி' பிரிமியர் காட்சி குறித்த முக்கிய தகவல்

வெளிநாடுகளில் ரிலீசுக்கு முந்தைய நாள் பிரிமியர் காட்சி திரையிடப்படுவதை போல சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி'...

விக்ரம்-நயன்தாரா பார்ட்டியில் 2000 பேர்

முதல்முறையாக விக்ரம்-நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

முதன்முதலில் 2வது நாயகன் வேடத்தில் சூரி

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சி மூலம் கோலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சூரி, தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்...