close
Choose your channels

வில்லன்களுக்கெல்லாம் வில்லன் ரஜினி சார். கிஷோர் பெருமிதம்

Thursday, June 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தின் டீசரில் 'யார்ரா அவன் கபாலி' வரச்சொல்லுடா அவனை' என்று அதிரடியாக வசனம் பேசி நடித்த கிஷோர், கபாலி' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ரஜினி சாரே இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கின்றார். வில்லன்களுக்கெல்லாம் வில்லனான அவருக்கு இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடித்துள்ளனர். அவர்களில் நானும் ஒருவன். ரஜினி சாரை எதிர்க்க ஒரு வில்லன் பத்தாது என்பதால் இயக்குனர் இந்த படத்தில் மூன்று வில்லன்களை வைத்துள்ளார் போலும்

மேலும் இந்த படம் மலேசிய நிழல் உலக தாதாக்களைப் பற்றிய கதை. மலேசியாவின் சமூக - அரசியல் மற்றும் பொருளாதார வரலாறும் ஓர் அங்கமாக இருக்கும் வகையில் 'கபாலி' படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் எனக்கு வழக்கமான வில்லன் கேரக்டர்தான். பெரிய பெரிய தங்க செயின்கள், காப்புகள் அணிந்து கொண்டு தோன்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளேன். ஒரு சகாப்தமாக இருக்கும் ரஜினியுடன் நடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி' என்று கிஷோர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment