'கபாலி'யின் 3வது டீசர் எப்போது?

  • IndiaGlitz, [Sunday,June 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் டீசர் கடந்த மே 1ஆம் தேதியும், 2வது டீசர் கடந்த 16ஆம் தேதியும் ரிலீஸ் ஆகி இணையதளங்களை அதிர வைத்தது. முதல் டீசர் உலக சாதனையும் நெருப்புடா' என்ற இரண்டாவது டீசர் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என்ற ஆவல் அனைவரிடம் இருந்து வருகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் டிரைலர் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக மூன்றாவது டீசர் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரிலீசுக்கு முன்னர் இந்த 3வது டீசர் வெளிவரவுள்ளது என்பதும் இன்னொரு முறை ரசிகர்களை 'மகிழ்ச்சி' அடைய செய்ய தலைவர் 'கபாலி' விரைவில் வரவுள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

More News

சிம்புவின் மூன்றில் ஒன்று ரிலீஸ். ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில்...

அஜித்தின் 'வேதாளத்துடன் கனெக்ஷன் ஆனது 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அந்த படத்தை பற்றிய விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தின் இயக்குனர் இவர்தான்

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை...

கார்த்தியின் 'காஷ்மோரா' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமான அறிவிப்பு

மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'காஷ்மோரா'...

பவர்ஸ்டாரின் அடுத்த ஹீரோயின் அனுஷ்கா-த்ரிஷா?

பவர்ஸ்டார் நடித்து முடித்துள்ள 'அட்ரா மச்சான் விசிலு' திரைப்படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி'