'கபாலி' இசை விமர்சனம்.

  • IndiaGlitz, [Sunday,June 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் பாடல்கள் எதிர்ப்பார்த்ததை விட பலமடங்கு பாடல்கள் மிக அபாரமாக அமைந்துள்ளது. குறிப்பாக 'நெருப்புடா...நெருங்குடா... என்ற பாடல் இன்னும் சில மாதங்களுக்கு தமிழகத்தையே கட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்த நிலையில் முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தனக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி அவரது ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளித்துள்ளார்.
1. உலகம் ஒருவனுக்காக...என்று தொடங்கும் பாடல் அனேகமாக ரஜினியின் அறிமுகப்பாடலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த பாடலின் வார்த்தைகளில் தத்துவ மழை பொழிந்துள்ளது என்று கூறினால் அது மிகையில்லை. 'கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்கிடாது..,
2. மாய நதி இன்று மார்பில் வழியுதே, தூய நரையிலும் காதல் மலருதே ....என்று தொடங்கும் இந்த பாடல் அருமையான மெலடியாக அமைந்துள்ளது. காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3. வீர துரந்தரா எமை ஆளும் நிரந்தரா...என்று தொடங்கும் இந்த பாடல் புரட்சி பாடலாக அமைந்துள்ளது. ராப் வரிகளுடன் ஹை ஸ்பீடில் அமைந்துள்ள இந்த பாடல் இளைஞர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை
4. வானம் பார்த்தேன்..என்ற இந்த பாடல் சோகப்பாடலாக அமைந்துள்ளது. மிக மிக ஸ்லோவான இசை நடையில் அமைந்துள்ள இந்த பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆகும் என்பதை படம் வெளிவந்த பின்னர் பார்க்கலாம்.
5. அருண்காமராஜ் பாடியுள்ள நெருப்புடா, நெருங்குடா...பாடலை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. அதிலும் இடையிடையே தலைவரின் வசனம் குறிப்பாக 'நான் வந்துட்டேன்னு சொல்லு, 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற ரஜினியின் வசனத்துடன் அமைந்துள்ள இந்த பாடல் கண்டிப்பாக முதலிடத்தை பெறும்.

'கபாலி' பட பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

More News

விஜய் 61' குறித்த தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது...

எனக்கு கிடைத்த 'ரூபாய்'க்கு அமிதாப் தான் காரணம். சின்னிஜெயந்த்

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சின்னி ஜெயந்த் தற்போது தனுஷின் 'தொடரி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்...

சென்னை படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ரன்னிங் டைம்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படம் U/A சர்டிபிகேட் பெற்றது...

சித்தார்த்துக்கு ஜோடியாகும் கமல் நாயகி

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது...