close
Choose your channels

22 மணி நேரத்தில் 5 மில்லியன். 'கபாலி'யின் அதிரடி சாதனை

Monday, May 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் டீசர் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசர் 22 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

இதுவரை 22 மணி நேரத்தில் ஷாருக்கானின் தில்வாலே' 3.6 மில்லியன் பார்வைகளையும், சல்மான்கானின் சுல்தான் 3.1 மில்லியன் பார்வையாளர்களையும், சல்மான்கானின் Prem Ratan Dhan Payo 3 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. மேற்கண்ட படங்கள் அனைத்தும் நான்கு மில்லியன்களை கூட தொடாத நிலையில் 'கபாலி' ஐந்து மில்லியனை கடந்துள்ளது என்பது அசைக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.

இந்த டீசருக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அபாரமான VFX காட்சிகள் இல்லாமல், கலர்கலரான ஹீரோயின்களின் டான்ஸ் காட்சிகள் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், சூப்பர் ஸ்டார் அவர்களின் மேனரிசம் ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு இந்த டீசர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment