இந்திய சினிமாவுக்கே பெருமை தேடி தந்த 'கபாலி'
Sunday, May 29, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் டீசர் இம்மாதம் 1ஆம் தேதி வெளிவரும்போது வழக்கமான ரஜினி படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் டீசரை பார்த்தவுடன் அதில் இருந்த காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின.
ரஜினியின் அதே ஸ்டைல், நடை, உடை, வசன உச்சரிப்பு, பின்னணி இசை ஆகியவை, பார்த்தவர்களையே திரும்ப திரும்ப பார்க்க வைத்தது. கபாலி டீசரை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது என்று ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானர்களும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் 'யூடியூபில்' 20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிவிட்டது. 20 மில்லியன் அதாவது 2 கோடி பார்வையாளர்களை ஒரு படத்தின் டீசர் வீடியோ தாண்டுவது என்பது சாதாரண விஷயமில்லை. இதுவரை எந்த இந்திய படமும் செய்திராக இந்த சாதனையை செய்து இந்திய சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த 'கபாலி' குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments