close
Choose your channels

நம்பவே முடியவில்லை. இது கனவா நனவா? 'கபாலி' ஸ்டண்ட் மாஸ்டர்கள்

Wednesday, August 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி பல உலக சாதனைகளை தகர்த்து வருகிறது. இந்த வெற்றியை 'கபாலி' படக்குழுவினர்களும் ரசிகர்களும் நாள்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், 'கபாலி' படத்தை தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு போட்டு காட்டி வருவதோடு, 'கபாலி' படத்தின் அனைத்து டெக்னீஷியன்களையும் வரவழைத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்து வருகிறார்.
இந்த வகையில் ரஜினியிடம் பாராட்டு பெற்றவர்களின் வரிசையில் தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பு, அறிவு ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த தகவலை அறிவு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
"சற்று முன்னர் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. 'கபாலி'யின் எங்கள் உழைப்புக்காக அவர் பாராட்டு தெரிவித்தார். அவரிடம் சிறிது நேரம் பேசியதே ஒரு கனவு போல இருந்தது. இப்பொழுதுகூட இது கனவா? நனவா? என்ற மனநிலைதான் எங்களுக்கு இருந்து வருகிறது. எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தையே இல்லை. அதே நேரத்தில் எங்கள் உழைப்புக்குரிய பலன் கிடைத்துவிட்டது. இதற்கு உண்மையில் 'கபாலி' குழுவினர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்' என்று அறிவு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment