உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 'கபாலி'. ஒரு சிறப்பு பார்வை
- IndiaGlitz, [Wednesday,July 20 2016]
கோலிவுட் திரையுலகில் தற்போது கிட்டத்தட்ட பாதி படங்களை பிரமாண்டம், பிரமாண்டம் என்றே கூறுகின்றனர். பல திரைப்படங்கள் பில்டப் செய்து பிரமாண்டம் போல் போலித்தோற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் ஒரு திரைப்படத்தின் உண்மையான பிரமாண்டம் என்றால் என்ன என்று 'கபாலி' படத்தின் புரமோஷனை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வானளாவிய எதிர்பார்ப்புக்கு ரஜினி என்ற ஒரே ஒரு நபர் மட்டுமே காரணம் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவுள்ள இந்த படம் குறித்த ஒரு சிறப்பு பார்வையை தற்போது பார்ப்போம்,
* ரஞ்சித் இயக்கியுள்ள கேங்ஸ்டர் படமான 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ரித்விகா, ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மெயின் வில்லனாக தைவான் நடிகர் Winston Chao நடித்ததோடு அவரே சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* 'கபாலி' ரஜினிக்கு 159வது படம். பாட்ஷாவுக்கு பின்னர் ரஜினிகாந்த் டான் ஆக நடித்த படம். பாட்ஷா மும்பையை அடிப்படையாக கொண்டதுபோல் இந்த படம் மலேசியாவை அடிப்படையாக கொண்டது.
*55 வயது டான் ஆக அறிமுகமாகும் ரஜினி, 25 வருடங்களை ஜெயிலில் கழித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து தன்னையும் தனது இனத்தவர்களுக்கும் கொடுமை செய்த வில்லனை பழிவாங்கும் கதை என்று கூறப்படுகிறது.
*மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் இந்திய படம். மேலும் மிக விரைவில் ஜப்பான், சீன, தைவான் உள்பட இன்னும் பல மொழிகளில் 'கபாலி' பேசப்போகிறார்
*கபாலி படத்தின் மொத்த கதையை யாரும் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு கூட அவரவர்களின் காட்சி மட்டுமே போட்டு காண்பிக்கப்பட்டது.
*இந்த படத்திற்காக ரஜினி 75 நாட்கள் வெள்ளைத்தாடியுடன் நடித்துள்ளார். ரஜினியின் வெள்ளை தாடி தோற்றம்தான் இந்த படத்தின் ஹைலைட்
*ப்ளாஷ்பேக்கில் வரும் சில நிமிட காட்சிகளில் 30 வருடங்களுக்கு முன்பிருந்த ரஜினியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர் ரஞ்சித்
*முதலில் 'கபாலி' படம் மூன்று மணி நேரத்திற்கு எடிட் செய்யப்பட்டது. ஆனால் படத்தின் நீளத்தை விரும்பாத ரஞ்சித் பின்னர் 2.30 மணி நேர படமாக மாற்றினார். 'கபாலி' வெற்றிக்கு பின்னர் அந்த அரை மணி நேர காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கும் திட்டமும் உள்ளதாம்.
* ரஜினியின் அறிமுகக்காட்சி மட்டுமே சுமார் ஒன்றைரை நிமிடங்கள் ஸ்லோமோஷனில் உள்ளதாம். இந்த காட்சிகளில் திரையரங்குகள் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை.
*'கபாலி' படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக 'நெருப்புடா' பாடல் இன்னும் சில மாதங்களுக்கோ அல்லது ஆண்டுகளுக்கோ ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*இந்த படத்தில் இடம்பெற்ற கார் சறுக்கல் காட்சி ஒன்றில் ரஜினிக்கு பதிலாக டூப் டிரைவர் ஒருவரை படக்குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரஜினி டூப்புக்கு ஒப்புக்கொள்ளாமல் ஒரே டேக்கில் அந்த சறுக்கல் காட்சியில் நடித்தார். ரஜினியின் கார் ஓட்டும் திறனை பார்த்து படக்குழுவினர் அசந்து போயினர்.
* அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய படம் 'கபாலி'தான்
* பாரீஸ் நகரில் 2800 இருக்கைகள் கொண்ட 'ரெக்ஸ் சினிமாஸ்' திரையரங்கில் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய படம் 'கபாலி'தான்
* ரிலீசுக்கு முன்பே ரூ.225 கோடி வசூல் செய்த சாதனை படம் 'கபாலி'
*சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பல அலுவலகங்கள் ஜூலை 22ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளது. வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் நிறுவனம் உள்பட திரையுலகிலும் அன்றைய தினம் ஒரே விடுமுறை மயம்தான்.
* புதுச்சேரி அரசு டாய்லெட் இல்லாத வீடுகளில் டாய்லெட் கட்டினாலும், பொது இடங்களை சுத்தப்படுத்தினாலும் கபாலி' டிக்கெட் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
*உலக சினிமா வரலாற்றில் இதுவரை விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரே படம் 'Hobbit' என்ற ஹாலிவுட் படம்தான். ஏர் நியூசிலாந்து' நிறுவனம் இந்த படத்தின் போஸ்டரை தங்களது விமானத்தில் விளம்பரப்படுத்தியது. இந்நிலையில் உலகிலேயே விமானத்தில் விளம்பரம் செய்யும் 2வது படம் 'கபாலி' என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் ஆசியா நிறுவனம் கபாலி படத்தை விளம்பரப்படுத்தியுள்ளதோடு, சிறப்பு விமானம் ஒன்றையும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
*ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களில் திரையிடப்படும் முதல் இந்திய படம் 'கபாலி'
*'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை இன்னும் பல வருடங்களுக்கு எந்த படமும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட நிலையில் ஒரே வருடத்தில் அந்த படத்தின் வசூலுக்கு சவால் விடும் வகையில் 'கபாலி' வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*சூப்பர் ஸ்டார் என்ற பவர் என்றால் என்ன? என்பது இந்த படத்திற்கு கிடைத்துள்ள எதிர்பார்ப்பு, வியாபாரம், டிக்கெட் விற்பனை, புரமோஷன் ஆகியவற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதை பார்த்த பின்னராவது இனிமேலும் யாரும் தங்களை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு ரஜினி மட்டுமே தகுதி உடையவர் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
*படத்தின் ரிசல்ட் என்ன என்பதை பற்றிய கவலையில்லாமல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த படத்தை ஒருமுறையாவது பார்த்துவிடுவார்கள் என்பது உறுதி. படம் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றால் இந்த படத்தின் சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினி படத்தால் மட்டுமே முடியும்.
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் 'கபாலி' படத்தை பற்றி எழுத இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றது. இருப்பினும் இத்துடன் முடித்து கொண்டு இந்த படத்தின் விமர்சனத்தோடு வரும் வெள்ளியன்று சந்திப்போம். அதற்கு முன்னர் 'கபாலி' படக்குழுவினர்களுக்கு நமது அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்