'கபாலி' ரிலீஸ் தேதி. கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதையும் இந்த படம் 152 நிமிடங்கள் ஓடவுள்ளதாகவும் வந்த அதிகாரபூர்வ செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சற்று முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். ரஜினி ரசிகர்கள் உள்பட ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

More News

'கபாலி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் சென்சார் இன்று நடைபெற்று வருவதாக ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்த நிலையில்...

உலகிலேயே இதுதான் முதல்முறை. 'கபாலி' செய்துள்ள இன்னொரு சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் புரமோஷன்கள் இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் கூட கண்டிராத வகையில் வானத்திற்கும் பூமிக்கும் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன...

தனுஷின் 3வது இந்தி படம் இதுதான்

பிரபல நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் 'கொடி', 'தொடரி', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம்...

ஜி.வி.பிரகாஷின் 8வது படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், கோலிவுட்...

முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இல்லாத விஜய் படம்

பிரபல கோலிவுட் இயக்குனர் .விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்...